கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கோட்ட தலைவர் நெல்லையப்பன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி அடையாள அட்டை உடனே வழங்க வேண்டும். ஊழியர்களுக்கான காலியிடப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
கிராமிய அஞ்சல் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட செக்யூரிட்டி தொகை ரூ.10 ஆயிரத்தை உடனடியாக திருப்பி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர் பூராஜா, பொருளாளர் முருகன், அஞ்சல் ஊழியர் சங்க தலைவர் கணேசமூர்த்தி, செயலாளர் பிச்சையா, பொருளாளர் பட்டுராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட ஏராளமான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story