திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு ஆட்சிமொழி கருத்தரங்கு


திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு ஆட்சிமொழி கருத்தரங்கு
x
தினத்தந்தி 3 March 2022 9:52 PM IST (Updated: 3 March 2022 9:52 PM IST)
t-max-icont-min-icon

தி்ண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு ஆட்சிமொழி கருத்தரங்கு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு 2 நாட்கள் ஆட்சி மொழி கருத்தரங்கு கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கியது. இதனை மாவட்ட மேலாளர் (குற்றவியல்) வடிவேல்முருகன் தொடங்கி வைத்து பேசினார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ வரவேற்று பேசினார். 

இதில் தமிழ் வளர்ச்சித்துறை முன்னாள் துணை இயக்குனர் சந்திரா, ஆட்சிமொழியின் வரலாறு-சட்டம் எனும் தலைப்பில் பேசினார்.
மேலும் அரசு அலுவலக பணியில் மொழிபெயர்ப்பு, கலைச்சொல்லாக்கம் குறித்து ஓய்வுபெற்ற தமிழாசிரியர் தமிழ் பெரியசாமி பேசினார். இதேபோல் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் துரை தில்லான் அரசு அலுவலர்களுக்கு மொழிபயிற்சி அளித்தார். 

தமிழ் மொழியின் சிறப்புகள் தொடர்பாக தேனி வைகை தமிழ் சங்க நிறுவனர் இளங்குமரன் பேசினார். இதில் ஏராளமான அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். 2-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) கருத்தரங்கு நடக்கிறது.


Next Story