‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 4 March 2022 12:30 AM IST (Updated: 3 March 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கால்நடை ஆஸ்பத்திரி அனைத்து நாட்களும் செயல்படுமா?

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் கிராமத்தில் கால்நடை ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் தற்போது வாரத்துக்கு 2 நாட்கள் மட்டுமே கால்நடை ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்காரணமாக கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி அனைத்து நாட்களும் செயல்பட நடவடிக்கை எடுப்பார்களா?
-செந்தில்குமார், பெருகவாழ்ந்தான்.

Next Story