நாகையில், 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
நாகப்பட்டினம்:
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
கனமழை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகை மாவட்டத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனை ெதாடர்ந்து நாகை மாவட்ட விவசாயிகள், அறுவடைக்கு தயாராக உள்ள நெல்வயல்கள் மற்றும் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்காத அளவிற்கு வடிகால் வசதிகள் ஏற்படுத்திட வேண்டும்.
அறுவடை செய்து உளர்த்தி காயவைக்கப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடங்களில் சேமித்து வைக்க வேண்டும். மேலும், மழையின் போது கால்நடைகளுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
1-ம் எண் எச்சரிக்கை கூண்டு
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நேற்று நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
Related Tags :
Next Story