அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் தி.மு.க.வில் சேர்ந்தார்


அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் தி.மு.க.வில் சேர்ந்தார்
x
தினத்தந்தி 3 March 2022 11:30 PM IST (Updated: 3 March 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் தி.மு.க.வில் சேர்ந்தார்.

சிங்கம்புணரி,

 சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சி 18 வார்டுகளில் 14 வார்டுகளில் தி.மு.க.வும், 2 வார்டுகளில் காங்கிரசும், ஒரு சுயேச்சையும், 17-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளரும் வெற்றி பெற்றார். கடந்த வாரம் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் தி.மு.க.வில் சேர்ந்தார். இதையடுத்து தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி பலம் 17 ஆனது. இந்த நிலையில் 17-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் கக்கன்ராஜா, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதையடுத்து தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி இணைந்து 18-க்கு, 18 கவுன்சிலர்கள் உள்ளனர்.


Next Story