மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
தேவகோட்டை அருகே சிவராத்திரி விழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 27 பேர் காயமடைந்தனர்.
காரைக்குடி,
தேவகோட்டை அருகே சிவராத்திரி விழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 27 பேர் காயமடைந்தனர்.
மஞ்சுவிரட்டு
தேவகோட்டை அருகே உள்ளது இருமதி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பாலாருடைய அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு சிவராத்திரி விழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மஞ்சுவிரட்டு விழா குழு தலைவர் துரைகருணாநிதி முன்னிலையில் ராமநாதபுரம் மன்னர் குமரன்சேதுபதி தலைமையில் மஞ்சுவிரட்டு தொடங்கியது.
முன்னதாக அங்குள்ள வயல்வெளி திடலில் கட்டுமாடுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து மதியம் 3 மணிக்கு கிராம மக்கள் மேள தாளத்துடன் திரண்டு வந்து பாலாருடைய அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த பின்னர் தொழுவத்தில் இருந்து தொழு மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இதை ஏராளமான மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் தப்பிச் சென்றது. மஞ்சுவிரட்டில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு சேர், கட்டில், குடம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
27 பேர் காயம்
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசாக ரூ.5ஆயிரத்தை டாக்டர் பிரபு வழங்கினார். முன்னதாக தொழு மாடு மஞ்சுவிரட்டில் மொத்தம் 289 காளைகள் பங்கேற்றது. அந்த காளைகளுக்கு கால்நடை மருத்துவர் அருளானந்து தலைமையிலான குழு பரிசோதனை செய்தது. தொடர்ந்து சீறி பாய்ந்து சென்ற காளைகளை பார்வையாளர்களாக திரண்ட இளைஞர்கள் அதை விரட்டி சென்று பிடித்தனர். இதில் சில காளைகள் அவர்களிடம் பிடிப்பட்டது. சில காளைகள் அவர்களை முட்டி தள்ளி விட்டு அங்கிருந்து சீறிபாய்ந்து சென்றது. இதில் காளைகள் முட்டியதில் 27 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மணிகண்டன், அழகுதாஸ், செல்வக்குமார் மற்றும் செவிலியர்கள் சிகிச்சையளித்தனர். இதில் பலத்த காயமடைந்த பெருவத்தி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது55) உள்பட 2 பேரை சிகிச்சைக்காக தேவகோட்டை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story