தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
நாகூரில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
நாகூர்:
நாகூர் சிவன் மேலவீதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நித்யானந்தன் (வயது 33). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சுகன்யா (26). இவர்களுக்கு கதிரவன் என்ற 1 வயது மகனும் உள்ளார். நித்யானந்தன் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டார். காலையில் அறைக்கு மனைவி சுகன்யா வந்து பார்த்த போது கணவர் நித்யானந்தன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம்போட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நித்யானந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story