விருதுநகர் மாவட்டத்தில் 5 நகராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 5 நகராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டத்தில் 5 நகராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் நகராட்சி
விருதுநகர் நகரசபை தலைவர் பதவிக்கு தி.மு.க. தலைமை 30-வது வார்டு கவுன்சிலர் மாதவனை வேட்பாளராக அறிவித்துள்ளது. பட்டதாரியான மாதவனின் வயது 43. இவரது மனைவி அனிதா முதுநிலைப் பட்டதாரி. ஷிவானிமதுமிதா என்ற 10 வயது மகளும், சிரஞ்சீவி விஷ்வாஷ் என்ற 8 வயது மகனும் உள்ளனர். தற்போது பழைய பேப்பர், ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து வருகிறார். இவர் மறைந்த முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் எஸ்.ஆர்.எஸ். ராஜாக்கனியின் மகன் ஆவார்.
விருதுநகர் நகராட்சியின் துணைத் தலைவர் வேட்பாளராக சுல்தான் அலாவுதீன்(56) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் விருதுநகர் 23-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது மனைவி ஜரீனா பேகம். முகமது ஜாசிர். சகின்காரித் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 20 வருடங்களுக்கு மேல் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருவதோடு பொதுச் சேவையிலும் ஈடுபட்டு உள்ளார்.
ராஜபாளையம் நகராட்சி
ராஜபாளையம் நகராட்சியில் 6-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பவித்ரா ஷியாம்(வயது 34). இவரது கணவர் ஷியாம் 40-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஷியாம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்து மாநில பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். மேலும் இவர், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஏ.ஏ.சுப்புராஜாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் தங்கம் ரவி கண்ணன்(வயது 39) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பி.பி.ஏ, எம்.பி.ஏ. படித்து உள்ளார். தி.மு.க.வில் இளைஞர் அணியில் பொறுப்பாளராக உள்ளார். இவரது தந்தை தங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இவரது தாத்தா அழகுதேவர் எம்.எல்.ஏ.வாக, இருந்தவர். ஆரம்ப காலம் முதல் இவர்களது குடும்பத்தினர் தி.மு.க.வில் உள்ளனர்.
சாத்தூர் நகராட்சி
தி.மு.க. சார்பில் சாத்தூர் நகராட்சி தலைவராக குருசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 14-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.சாத்தூர் தி.மு.க. நகர செயலாளராக உள்ளார். இவரது மனைவி புனிதா(வயது 58). இவர்களது மகன் கற்பககண்ணன் (36) இ-சேவை மையம் நடத்தி வருகிறார். மகள் கற்பகஜோதி (34) மருத்துவராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே இவர் 2006 முதல் 2011 வரை நகராட்சி தலைவராக பதவி வகித்துள்ளார்.
சாத்தூர் நகர்மன்ற துணைத்தலைவராக அசோக்(59) அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி சுபாஷினி (54), மகன் அன்பு மணிமாறன் (28), மகள் மணிமேகலை வாணி (26). இதில் சுபாஷினி 2001-2006-ம் ஆண்டு வரை சாத்தூர் நகர்மன்றத் தலைவராக பதவி வகித்துள்ளார்.
அருப்புக்கோட்டை நகராட்சி
அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளராக சுந்தர லட்சுமி(வயது 45) அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் 21-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது கணவர் சிவப்பிரகாசம். மகள் நந்திதாலட்சுமி டாக்டராக உள்ளார். சிவப்பிரகாசம் 2006-2011, 2011- 2016-ல் நகராட்சி தலைவராக பதவி வகித்துள்ளார்.
Related Tags :
Next Story