மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 4 March 2022 12:19 AM IST (Updated: 4 March 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி

விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரிபுரத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 46). இவர் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து ஊர் திரும்பும்போது விருதுநகர் இந்திரா நகரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்றார். விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ஆற்றுப்பாலம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த ராதாகிருஷ்ணன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மனைவி விமலா கொடுத்த  புகாரின்பேரில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story