மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ள ஏற்பாடு
விழுப்புரம் மாவட்டத்தில் மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு மின்னணு வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கணினி நிரலாளர் அறையில் வைக்கப்பட்ட கிசாக்ஸ் என்ற எந்திரம் மூலம் மின்னணு வண்ண வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கணினி நிரலாளர் அறையில் கிசாக்ஸ் எந்திரம் மூலம் மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மோகன் கலந்துகொண்டு வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டையை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தேர்தல் இணையதள முகவரியான http://www.nvsp.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து தங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு வரப்பெற்ற குறுஞ்செய்தியுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கணினி பிரிவில் காண்பித்து வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன், தேர்தல் தனி தாசில்தார் சீனிவாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story