மணல் கடத்தியவர் கைது; மாட்டு வண்டி பறிமுதல்


மணல் கடத்தியவர் கைது; மாட்டு வண்டி பறிமுதல்
x
தினத்தந்தி 4 March 2022 2:29 AM IST (Updated: 4 March 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டு, மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் மாட்டு வண்டியில் மணல் அள்ளப்படுவதாக கோவிந்தபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்விக்கு தகவல் கிடைத்தது. இது பற்றி அவர் விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார், கோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்றுப் படுகைப் பகுதியில் இருந்து கோவிந்தபுத்தூர் நோக்கி வந்த மாட்டு வண்டியை மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து, அதனை ஓட்டி வந்த கீழ கோவிந்தபுத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(வயது 45) மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story