மாணவர் நவீன் உடல் மீட்பு பற்றி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை கருத்து
உக்ரைனில் ரஷிய தாக்குதலில் பலியான மாணவர் நவீன் உடலை மீட்பது பற்றி பா.ஜனதா எம்.எல்.ஏ. சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். அதாவது, ‘சவப்பெட்டி வைக்கும் இடத்தில் 8 மாணவர்களை அமர வைத்து அழைத்து வர முடியும்’ என்றார்.
பெங்களூரு: உக்ரைனில் ரஷிய தாக்குதலில் பலியான மாணவர் நவீன் உடலை மீட்பது பற்றி பா.ஜனதா எம்.எல்.ஏ. சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். அதாவது, ‘சவப்பெட்டி வைக்கும் இடத்தில் 8 மாணவர்களை அமர வைத்து அழைத்து வர முடியும்’ என்றார்.
கட்சிகள் கண்டனம்
மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களில் 90 சதவீதம் பேர் இங்கு நடத்தப்படும் நீட் தகுதி தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் என்று கூறினார். வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் குறித்து அவர் கூறிய இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா கட்சியை சேர்ந்த அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ., உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் உடலை மீட்டு கொண்டுவருவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
8 மாணவர்கள்
உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடலை மீட்டு கொண்டுவர விமானத்தில் அதிக இடம் தேவை. அவரது உடல் இருக்கும் சவப்பெட்டியை வைக்கும் இடத்தில் 8 மாணவர்களை அமர்த்தி அழைத்துவர முடியும். நவீனின் உடலை கொண்டுவர அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. உக்ரைனில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு உயிருடன் இருப்பவர்களை அழைத்து வருவது கடினமான பணியாக உள்ளது.
இந்த நேரத்தில் இறந்தவரின் உடலை கொண்டுவருவது என்பது மிக கடினம். ஆயினும் அவரது உடலை கொண்டுவர வெளியுறவுத்துறை தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளது. உக்ரைனில் இருப்பவர்கள் நெருக்கடியில் உள்ளனர். அவர்கள் ருமேனியாவுக்கு வந்துவிட்டால் பாதுகாப்பாக இருப்பார்கள்.
இவ்வாறு அரவிந்த் பெல்லத் கூறினார்.
Related Tags :
Next Story