மோட்டார்சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி- பெண் படுகாயம்


மோட்டார்சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி- பெண் படுகாயம்
x
தினத்தந்தி 4 March 2022 3:56 AM IST (Updated: 4 March 2022 3:56 AM IST)
t-max-icont-min-icon

ஊஞ்சலூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். பெண் படுகாயம் அடைந்தார்.

ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். பெண் படுகாயம் அடைந்தார். 
மோட்டார்சைக்கிளில் சென்றனர்
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள பாசூர் வேங்கியாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். அவருடைய மகன் கமலேஷ் (வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு 9.45 மணி அளவில் பாசூரில் இருந்து வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சித்தாளந்தூரை சேர்ந்தவர் சக்திவேல் (32). அவருடைய மனைவி சசிகலா (29). இவர்கள் மோட்டார்சைக்கிளில் மொடக்குறிச்சி அருகே உள்ள காகம் என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
விபத்தில் சாவு
சாஸ்திரி நகர் அருகே சென்றபோது 2 மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து கமலேஷ், சக்திவேல், சசிகலா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு கமலேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் அங்கிருந்து சக்திவேல், சசிகலா ஆகியோர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சக்திவேல் நேற்று மதியம் 3.30 மணி அளவில் இறந்தார். சசிகலா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story