மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
அந்தியூர் அருகே மாணவியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே மாணவியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மாணவி கடத்தல்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மறவன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். அவருடைய மகன் சந்தோஷ் (வயது 20). இவர் ஒலகடம் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அந்தியூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சந்தோசையும், மாணவியையும் தேடி வந்தார்.
வாலிபர் கைது
இந்த நிலையில் சந்தோஷ் மாணவியுடன் வெளியூர் செல்ல வெள்ளித்திருப்பூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சந்தோசிடம் இருந்து மாணவியை மீட்டனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர். பின்னர் அவர் பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story