31 பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் விவரம்
குமரி மாவட்டத்தில் 31 பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 31 பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மறைமுக தேர்தல்
தமிழகத்தில் உள்ள 490 பேரூராட்சிகளில் கடம்பூர் தவிர்த்து 489 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று 435 பேரூராட்சிகளை கைப்பற்றியது. அதே போன்று 138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளையும் வென்றது.
இந்த நிலையில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார்.
தி.மு.க. வேட்பாளர்கள்
அதன்படி குமரி மாவட்டத்தில் 51 பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் 31 பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்
அகஸ்தீஸ்வரம்-அன்பரசி, அஞ்சுகிராமம்-ஜானகி, அழகியபாண்டியபுரம்-ஜெயஷீலா, கணபதிபுரம்-ஷீபா ஷாலினி, கன்னியாகுமரி-ஸ்டீபன், கொட்டாரம்-வசந்தகுமாரி, சுசீந்திரம்-அனுஷ்யா, தாழக்குடி-சிவக்குமார், தென்தாமரைகுளம்-விஜிலா பாக்கியபாய், தேரூர்-அய்யப்பன், நெய்யூர்-பிரதீபா, புத்தளம்-சத்தியவதி, மணவாளக்குறிச்சி-குட்டி ராஜன், மண்டைக்காடு-ராபர்ட் லாரன்ஸ், மருங்கூர்- ஜேனோவி பமீலா, முளகுமூடு-ஜெயராணி, ரீத்தாபுரம்-ஜெயசேகர்.
மேற்கு மாவட்டம்
ஆற்றூர்-பீனா அமிர்தராஜ், இடைக்கோடு-பிஜி, களியக்காவிளை-டெல்பின் ஜெமீலா, கிள்ளியூர்-ஷீலா, கீழ்குளம்-சரளா, குமாரபுரம்-ஷாஜி, குலசேகரம்-ஜோஸ் எட்வர்ட், கோதைநல்லூர்-ஆலிவர் சேம்ராஜ், திருவிதாங்கோடு-ஹாரூன் ரஷீத், நல்லூர்-வளர்மதி, பளுகல்-விஜி தாமஸ், பொன்மனை-சந்திரா, விலவூர்-விஜயலட்சுமி .
Related Tags :
Next Story