தூக்க மாத்திரை தின்று பெண் தற்கொலை


தூக்க மாத்திரை தின்று பெண் தற்கொலை
x
தினத்தந்தி 4 March 2022 4:57 AM IST (Updated: 4 March 2022 4:57 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கடை அருகே தூக்க மாத்திரை தின்று பெண் தற்கொைல செய்து கொண்டார்.

புதுக்கடை:
புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு குன்றுவிளையை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி தங்கபாய்(வயது54). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதற்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்த தங்கபாய் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை தின்று வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கபாய் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story