கீழேகிடந்த நகையை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த ஆசிரியை
கீழே கிடந்த நகையை எடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த ஆசிரியையை இன்ஸ்பெக்டர் பாராட்டினார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடையில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஸ்மிலின். இவர் நேற்று முன்தினம் காலையில் அதே பள்ளியில் படிக்கும் தனது மகனுடன் மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் பஸ் ஏறுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோரத்தில் 1¼ பவுன் எடை உள்ள ஒரு தங்க வளையல் கிடப்பதை கண்டெடுத்தார். பின்னர், அவர் அனாதையாக கிடந்த அந்த வளையலை மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமாரிடம் ஒப்படைத்தார். அதை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர், ஆசிரியையின் நேர்மையை பாராட்டினார். மேலும், அந்த வளையலை தொலைத்தவர்கள் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு வந்து அதற்குரிய அடையாளத்தை தெரிவித்து பெற்றுச் செல்லுமாறு இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story