முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 4 March 2022 5:52 PM IST (Updated: 4 March 2022 5:52 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடிக்கு முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் நாளை(ஞாயிற்றுக்கிழமை) வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

தூத்துக்குடி:
தூத்துக்குடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(ஞாயிற்றுக்கிழமை) வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.
முதல்-அமைச்சர்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் தூத்துக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவச்சிலை திறப்பு, ஸ்பிக் நிறுவனத்தில் சூரிய ஒளி மின்சக்தி உபகரணங்கள் திறப்பு, சிப்காட்டில் சர்வதேச அறைகலன் பூங்கா அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
ஆய்வு
இதனை முன்னிட்டு முதல்-அமைச்சர் பயண திட்டத்தில் இடம்பெற்று உள்ள பகுதிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வின் போது, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள், தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story