சுயேச்சை வேட்பாளர் தலைவராக வெற்றி
சுயேச்சை வேட்பாளர் தலைவராக வெற்றி
குன்னத்தூர் பேரூராட்சியில் அ.தி.மு.க. ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றார். துணை தலைவராக காங்கிரஸ் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குன்னத்தூர் பேரூராட்சி
குன்னத்தூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க6 வார்டுகளிலும், அ.தி.மு.க.5 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்று கவுன்சிலர்களானார்கள்.
இதைத்தொடர்ந்து நேற்று பேரூராட்சி கூட்ட அரங்கில் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் தேர்தலை தேர்தல் அலுவலர்கள் செந்தில், திருமுருக ராஜா, ஆறுமுகசாமி ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள். பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த 13 வது வார்டு உறுப்பினர் வெங்கடாசலம், 12வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கொமரசாமி ஆகியோர் போட்டியிட்டார்கள்.
சுயேச்சை வேட்பாளர்
தி.மு.க. வேட்பாளர் வெங்கடாசலத்திற்கு 7 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் கொமாரசாமிக்கு 8 வாக்குகளும் கிடைத்தது. இதில் 8 வாக்குகள் பெற்ற சுயேச்சை வேட்பாளர் கொமரசாமி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மதியம் நடந்த துணை தலைவர் தேர்தலில் தி.மு.க. கட்சியை சேர்ந்த 7 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து விட்ட காரணத்தினால் பேரூராட்சி துணைத் தலைவராக 4து வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அ.தி.மு.க. ஆதரவு
நடைபெற்ற மறைமுக தலைவர் தேர்தலில் தி.மு.க. 6 உறுப்பினரும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு உறுப்பினரும் என மொத்தம் 7 பேர் உள்ளார்கள். இதில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வாக்களித்திருந்தால் தி.மு.க. தலைவர் பதவியை கைப்பற்றி இருக்கும். ஆனால் சுயேச்சை வேட்பாளராகிய கொமாரசாமிக்கு அ.தி.மு.க5, காங்கிரஸ் ஒருவர், சுயேச்சை வேட்பாளர்கள் ஆதரவு தெரிவித்ததால் சுயேச்சை வேட்பாளர் கொமரசாமி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் அ.தி.மு.க.5, மொத்தம் 7 பேர் சுயேச்சை வேட்பாளர் குமாரசாமிக்கு வாக்களித்ததால் அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் குன்னத்தூர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்துள்ளார். ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி துணைத் தலைவராக அ.தி.மு.க., சுயேச்சை ஆதரவுடன் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் காங்கிரஸ் வேட்பாளர் மாற்றி வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
மறியல்
குன்னத்தூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் முடிந்ததும் திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இந்த தேர்தல் முறைகேடாக நடந்துள்ளது என கூறிக்கொண்டு நாங்கள் மறியல் செய்வோம் என கட்சி பொருப்பாளர்களுடன் ரோட்டில் அமர்ந்தார்கள். உடனே குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா, சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அனைவரும் தேர்தல் விதிமுறைப்படி தான் நடந்துள்ளது நீங்கள் எது கூறுவதாக இருந்தாலும் தேர்தல் அதிகாரியிடம் முறையிடுங்கள். இவ்வாறு ரோட்டில் அமர்ந்தால் உங்கள் அனைவரையும் கைது செய்வோம் என்று கூறியதால் அனைவரும் கலைந்து சென்றார்கள்.
Related Tags :
Next Story