தி.மு.க. வேட்பாளர் ஷீலா கேத்ரின் போட்டியின்றி தேர்வு


தி.மு.க. வேட்பாளர் ஷீலா கேத்ரின் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 4 March 2022 9:11 PM IST (Updated: 4 March 2022 9:11 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் நகராட்சி தலைவராக தி.மு.க. வேட்பாளர் ஷீலா கேத்ரின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

குன்னூர்

குன்னூர் நகராட்சி தலைவராக தி.மு.க. வேட்பாளர் ஷீலா கேத்ரின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மறைமுக தேர்தல்

குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் 22 வார்டுகளில் தி.மு.க., 6 வார்டுகளில் அ.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சை தலா ஒரு வார்டில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. 

தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளராக ஷீலா கேத்ரின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் குன்னூர் நகராட்சி தலைவராக ஷீலா கேத்ரின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அ.தி.மு.க. புறக்கணிப்பு

இதையடுத்து துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. வேட்பாளராக வாசிம்ராஜா போட்டியிட்டார். அவரை எதிர்த்தும் யாரும் போட்டியிடவில்லை. இதனால் வாசிம்ராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். 


Next Story