தி.மு.க. வேட்பாளர் வள்ளி வெற்றி
தேவர்சோலை பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வள்ளி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் இறங்கிய அதே கட்சியை சேர்ந்த பொன்னி தோல்வி அடைந்தார்.
கூடலூர்
தேவர்சோலை பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வள்ளி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் இறங்கிய அதே கட்சியை சேர்ந்த பொன்னி தோல்வி அடைந்தார்.
ஒரே கட்சி வேட்பாளர்கள்
நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டுகளில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சை தலா 3 வார்டுகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் முஸ்லிம் லீக் தலா 2 வார்டுகளில், அ.தி.மு.க. ஒரு வார்டில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளராக 9-வது வார்டு கவுன்சிலர் வள்ளி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த 17-வது வார்டு கவுன்சிலர் பொன்னி களம் இறங்கினார். இதில் 10 வாக்குகள் பெற்று வள்ளி வெற்றி பெற்றார்.
மறு தேர்தல்
இதையடுத்து துணைத்தலைவர் பதவிக்கு தி.மு.க. கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரும், 5-வது வார்டு கவுன்சிலருமான ஜோஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதே கூட்டணியில் உள்ள தி.மு.க.வை சேர்ந்த 2-வது வார்டு கவுன்சிலர் மாதேவ், காங்கிரசை சேர்ந்த 3-வது வார்டு கவுன்சிலர் யுனெஸ் பாபு, முஸ்லிம் லீக்கை சேர்ந்த 11-வது வார்டு கவுன்சிலர் அனிபா களம் இறங்கினர்.
இதில் ஜோஸ்-2, மாதேவ்-5, யுனெஸ் பாபு-8, அனிபா-3 வாக்குகள் பெற்றனர். இதனால் வாக்கு சதவீதம் பிரிந்ததால், மறு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் மாதேவ், யுனெஸ் பாபு போட்டியிட்டனர். இறுதியாக 12 வாக்குகள் பெற்று யுனெஸ் பாபு வெற்றி பெற்றார்.
Related Tags :
Next Story