முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் நாளை(ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி வருகை: அமைச்சர் கீதாஜீவன்
முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை தூத்துக்குடி வருகை தருவதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் ெசய்து பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்பதாக, தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முதல்-அமைச்சர்
தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை(ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி எட்டயபுரம் சாலை கலைஞா் அரங்க வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞா் கலைஞா்ரின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, கழகத்தின் மூத்தமுன்னோடிகள் 300 பேருக்கு பொற்கிழி வழங்குகிறார்.
நாளை
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 22 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். காலை 11 மணிக்கு தூத்துக்குடி திருச்செந்தூா் சாலையில் உள்ள மாணிக்கம் மகாலில் சுமார் 1152 ஏக்கரில் ரூ.1000 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள பர்னிச்சர் பார்க்கிற்கு அடிக்கல் நாட்டுகிறார். மதியம் 12 மணி அளவில் சமீபத்தில் பெய்த பெருமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளான பிரையண்ட்நகர், அம்பேத்கார்நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகளையும் பிறபகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய உள்ள திட்டப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
எனவே, அனைத்து நிகழ்ச்சிகளிலும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story