விபத்தில் காயமடைந்த மூதாட்டிக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் காயமடைந்த மூதாட்டிக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 4 March 2022 11:12 PM IST (Updated: 4 March 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் காயமடைந்த மூதாட்டிக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

பரமத்திவேலூர்:
விபத்தில் காயமடைந்த மூதாட்டிக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
மூதாட்டி படுகாயம்
மோகனூர் தாலுகா வள்ளியப்பன்பட்டியை சேர்ந்தவர் மாறன். இவரது மனைவி ராமாயி (வயது 65). முட்டை வியாபாரம் செய்து வந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந் தேதி பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் பஸ்சில்  இருந்து இறங்கும்போது தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பான வழக்கு பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. 
இந்த வழக்கில் விசாரணை முடிந்து பாதிக்கப்பட்ட ராமாயிக்கு போக்குவரத்து கழகம் தரப்பில் இருந்து ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 629-ஐ நஷ்டஈடாக வழங்க அப்போதைய  நீதிபதி அசின்பானு உத்தரவிட்டார். 
பஸ் ஜப்தி
ஆனால் அரசு போக்குவரத்து கழகம் ராமாயிக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கவில்லை. இந்த நிலையில் மனுதாரர் சார்பில் பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரபாகரன், ராமாயிக்கு சேர வேண்டிய இழப்பீட்டு தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 429-ஐ உடனே வழங்க வேண்டும் எனவும், தவறினால் சம்பந்தப்பட்ட சேலம் கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். 
அதன்பேரில் கோர்ட்டு அமினா ராமசாமி, வழக்கறிஞர் பிரபு, மனுதாரர் ராமாயி ஆகியோர் நேற்று பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் நின்ற சேலம் கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்தனர். பின்னர் பஸ்சை பரமத்தி சார்பு நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.

Next Story