சாயல்குடி பேரூராட்சி தலைவராக மாரியப்பன் தேர்வு


சாயல்குடி பேரூராட்சி தலைவராக மாரியப்பன் தேர்வு
x
தினத்தந்தி 5 March 2022 1:11 AM IST (Updated: 5 March 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

சாயல்குடி பேரூராட்சி தலைவராக மாரியப்பன் தேர்வு செய்யப்பட்டார்.

சாயல்குடி, 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி சற்று வித்தியாசமானது. 1986-ம் ஆண்டு முதல் சமுதாய கூட்டணியில் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடைபெற்ற பேரூராட்சி தேர்தலில் மாரியப்பன் தலைமையில் ஒரு கூட்டணியும், முன்னாள் தலைவர் முகமது ஜின்னா தலைமையில் மற்றொரு கூட்டணியும் தேர்தலில் போட்டியிட்டனர். இந்த கூட்டணியில் மாரியப்பன் தரப்பில் 9 வார்டுகளிலும், முகமது ஜின்னா தரப்பில் 5 வார்டுகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இருவரது கூட்டணி இன்றி 13-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட மணிமேகலை பாக்கியராஜ் வெற்றி பெற்றார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பேரூராட்சி தலைவர் தேர்தலில் மாரியப்பன், முகமது ஜின்னா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் 10 ஓட்டுக்கள் பெற்று மாரியப்பன் வெற்றி பெற்றார். பேரூராட்சி தலைவர் மாரியப்பன் 1-வது வார்டிலும் அவரது மனைவி பானுமதி 2-வது வார்டிலும் வெற்றி பெற்றிருந்தார். அவருக்கு தேர்தல் அலுவலரும் சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலருமான சேகர், இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதேபோல் நேற்று மாலை துணைத்தலைவர் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் சேகர் அறிவித்தார்.

Next Story