ரிலையன்ஸ் நிறுவனத்தில் ரூ.11 லட்சம் மோசடி; 3 பேர் மீது வழக்கு
ரிலையன்ஸ் நிறுவனத்தில் ரூ.11 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கரூர்,
கரூரில் இயங்கி வரும் ரிலையன்ஸ் சில்லரை விற்பனை நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் நாகராஜன் (வயது 43). இவர் கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- ரிலையன்ஸ் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக காசாளராக பணிபுரிந்து வந்த செல்லாண்டி பாளையத்தை சேர்ந்த தீபக் மற்றும் ஏமூரை சேர்ந்த தினேஷ் குமார், வெங்கமேட்டை சேர்ந்த ராம்குமார் ஆகியோர் போலியான விலைப்பட்டியல் வைத்தும், பில் அடித்தும் மோசடி செய்து வந்தது தணிக்கையில் தெரிய வந்தது. இதன் மூலம் ரூ.11 லட்சத்து 2 ஆயிரம் மோசடி செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. எனவே இவர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பியூலா ஞான வசந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story