சுயேச்சை வேட்பாளர் தலைவர் பதவியை கைப்பற்றினார்


சுயேச்சை வேட்பாளர் தலைவர் பதவியை கைப்பற்றினார்
x
தினத்தந்தி 5 March 2022 1:27 AM IST (Updated: 5 March 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

சுயேச்சை வேட்பாளர் தலைவர் பதவியை கைப்பற்றினார்

கல்லக்குடி, மார்ச்.5-
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. நடைபெற்று முடிந்த தேர்தலில் 8 வார்டுகளை தி.மு.க.வும், 4 வார்டுகளை அ.தி.மு.க.வும்,  3 வார்டுகளை சுயேச்சைகளும் கைப்பற்றினர்.  இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. தி.மு.க.சார்பில்  3-வது வார்டு கவுன்சிலர் கோகிலா முத்துக்குமாரும், சுயேச்சை கவுன்சிலர் ஆலீஸ்செல்வராணி ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதில் சுயேச்சை வேட்பாளர் ஆலீஸ்செல்வராணி 9 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தி.மு.க. கட்சியை சேர்ந்தவர் என்றாலும் 1-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு தி.மு.க.வின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மதியம் நடந்த துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. 11-வது வார்டு கவுன்சிலர் இந்திராகாந்தியும், மற்றொரு தி.மு.க.. கட்சியை சேர்ந்த 7-வது வார்டு கவுன்சிலர் ஜீவானந்தமும் போட்டியிட்டனர். இதில் இந்திராகாந்தி 8 வாக்குகள் பெற்று துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றிபெற்ற தலைவர் ஆலீஸ்செல்வராணி, துணைத் தலைவர் இந்திரா காந்தி ஆகியோர் செயல்அலுவலர் ஜவகர் தலைமையில் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

Next Story