மேயராக அன்பழகன் போட்டியின்றி தேர்வு
திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகனும், துணை மேயராக திவ்யாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
திருச்சி,மார்ச்.5-
திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகனும், துணை மேயராக திவ்யாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மாநகராட்சி தேர்தல்
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இதில் வார்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. 49 வார்டுகளில் தி.மு.க.வும், 5 வார்டுகளில் காங்கிரஸ், ம.தி.மு.க. 2 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், சுயேச்சைகள் 2 வார்டுகளிலும், அ.ம.மு.க. ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன.
மேயராக போட்டியின்றி தேர்வு
இவர்கள் அனைவரும் 2-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர். திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று காலை தொடங்கியது. திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்ட மன்றத்தில் காலை 9.30 மணிக்கு தி.மு.க. வேட்பாளர் மு.அன்பழகன் மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமானிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து கூட்ட அரங்கில் மேயர் வேட்பாளரை எதிர்த்து யாரும் போட்டியிட முன் வராததால் தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் திருச்சி மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆணையர் முஜிபுர்ரகுமான் அறிவித்தார்.இதையடுத்து திருச்சி மேயராக அன்பழகன் உறுதி மொழி வாசித்து பொறுப்பேற்றுக்கொண்டார்.
அமைச்சர்கள் வாழ்த்து
இந்த நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, கலெக்டர் சிவராசு, போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு மேயர் அன்பழகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
அ.தி.மு.க., சுயேச்சை புறக்கணிப்பு
இந்த தேர்தலை அ.தி.மு.க. கவுன்சிலர்களான 14-வது வார்டு அரவிந்தன், 37-வது வார்டு அனுசியா, 65-வது வார்டு அம்பிகாபதி, 20-வது வார்டு (சுயேச்சை) கவுன்சிலர் எல்.ஐ.சி.சங்கர் ஆகியோர் புறக்கணித்தனர். ஆனால் அ.ம.மு.க. கவுன்சிலர் செந்தில்நாதன் பங்கேற்றார்.
துணைமேயர்
இதனை தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு துணை மேயர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் திவ்யா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்ய முன்வராததால் துணை மேயராக திவ்யாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவரும் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கவுன்சிலர்கள், அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக மேயர், துணை மேயருக்கான மறைமுக தேர்தலையொட்டி திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருச்சி மாநகராட்சியில் தி.மு.க. சார்பில் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story