விருதுநகர் நகராட்சிக்கு தலைவர், துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு
விருதுநகர் நகராட்சிக்கு தி.மு.க. சார்பில் தலைவர், துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் நகராட்சிக்கு தி.மு.க. சார்பில் தலைவர், துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
நகரசபை தலைவர்
விருதுநகர் நகராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. விருதுநகர் நகரசபை தலைவராக தி.மு.க. சார்பில் தலைமையால் அறிவிக்கப்பட்ட ஆர்.மாதவன் நேற்று மனு தாக்கல் செய்தார். அவர் ஒருவர் மட்டுமே தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தநிலையில் நகரசபைத் தலைவர் பதவிக்கு அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரியான கமிஷனர் சையது முஸ்தபா கமால் அறிவித்தார்.
அவருக்கு நகராட்சி உறுப்பினர்களும், அலுவலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
வாழ்த்து
இதனைதொடர்ந்து நேற்று மதியம் துணைத் தலைவருக்கான தேர்தலில் தி.மு.க. சார்பில் 10-வதுவார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தனலட்சுமி துளசிராமன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி கமிஷனர் சையது முஸ்தபா கமால் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கும் தலைவர் மாதவன், உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த விழாவில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ராஜா சொக்கர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், வணிக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story