ஈரோடு மாவட்டத்தில் வெற்றி பெற்ற 4 நகராட்சி தலைவர்கள்


ஈரோடு மாவட்டத்தில் வெற்றி பெற்ற  4 நகராட்சி தலைவர்கள்
x
தினத்தந்தி 4 March 2022 9:56 PM GMT (Updated: 2022-03-05T03:26:59+05:30)

ஈரோடு மாவட்டத்தில் வெற்றி பெற்ற 4 நகராட்சி தலைவர்கள் விவரம் வருமாறு:-

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் வெற்றி பெற்ற 4 நகராட்சி தலைவர்கள் விவரம் வருமாறு:- 
4 நகராட்சிகள்
ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பவானி ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. 
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சிகளுக்கு தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்ந்து எடுப்பதற்காக மறைமுக தேர்தல் அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் நடைபெற்றது. பாதுகாப்புக்காக ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள். இதையடுத்து காலை 10 மணி அளவில் மறைமுக தேர்தல் நடைபெற்றது. 
ேகாபி, சத்தி
மறைமுக தேர்தலில் கோபி நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த என்.ஆர்.நாகராஜ் வெற்றிபெற்றார். துணை தலைவராக காங்கிரசை சேர்ந்த தீபா தேர்வு செய்யப்பட்டார். 
சத்தியமங்கலம் நகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த ஆர்.ஜானகிராமசாமி வெற்றிபெற்றார். துணை தலைவராக தி.மு.க.வை சேர்ந்த நடராஜ் தேர்வு செய்யப்பட்டார். 
புஞ்சைபுளியம்பட்டி, பவானி
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த டி.ஜனார்த்தனன் வெற்றிபெற்றார். துணை தலைவராக தி.மு.க.வை சேர்ந்த பி.ஏ.சிதம்பரம் தேர்வானார். 
 பவானி நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சிந்தூரி  இளங்ேகாவன் வெற்றிபெற்றார்.  துணை தலைவராக இந்திய கம்யூனிஸ்டு் கட்சியை சேர்ந்த மணி தேர்வானார். 
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி தலைவர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.

Next Story