மேட்டூர் அனல் மின் நிலைய அலுவலரிடம் ரூ.2¾ லட்சம் மோசடி


மேட்டூர் அனல் மின் நிலைய அலுவலரிடம் ரூ.2¾ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 5 March 2022 4:35 AM IST (Updated: 5 March 2022 4:35 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அனல் மின் நிலைய அலுவலரிடம் ரூ.2¾ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம்:
மேட்டூரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 44). இவர் அங்குள்ள அனல் மின் நிலையத்தில் கள அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு மர்ம நபர் தொடர்புக்கொண்டு, நிலத்தில் செல்போன் கோபுரம் அமைப்பது குறித்து பேசினார். இதையடுத்து அந்த நபர் கூறிய வங்கிக்கணக்குக்கு செல்வகுமார் முன்பணமாக ரூ.63 ஆயிரம் செலுத்தினார். மேலும் வங்கிக்கணக்கு விவரங்களையும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து செல்வகுமார் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 13 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story