பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற வலியபடுக்கை பூைஜயில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற வலியபடுக்கை பூைஜயில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாசித்திருவிழா
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் மாசித்திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சிறப்பு தீபாராதனை, சாமி வீதிஉலா, சமய மாநாடு உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.
விழாவில் நேற்று காலை 6.30 மணிக்கு தீபாராதனை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், பகல் 12 மணிக்கு யானைமீது சந்தனக்குட ஊர்வலம், மதியம் 1 மணிக்கு தீபாராதனை, மாலை 6 மணிக்கு யானை மீது களப பவனி, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு சமய மாநாடு ராஜரத்தினம் தலைமையில் நடந்தது.
தொடர்ந்து இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அம்மனுக்கு திருக்கண் சாத்தி வழிபட்டனர்.
வலிய படுக்கை பூஜை
பின்னர் ஆண்டுக்கு ஆறு முறை மட்டும் நடைபெறும் சிறப்பு வாய்ந்த வலிய படுக்கை பூஜை நடந்தது. அதன்படி நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகா பூஜை தொடங்கியது. வலிய படுக்கைபூஜையில் அம்மனுக்கு அவல், பொரி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, மாவு, தேங்காய், பழவகைகள், இளநீர் பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவுப் பதார்த்தங்கள் படைக்கப்பட்டது.
அப்போது அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வலிய படுக்கை பூஜை நடந்தபோது கோவிலில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரள பக்தர்களும் ஏராளமானோர் திரண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story