காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மகாலட்சுமி வெற்றி
காஞ்சீபுரம் மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மகாலட்சுமி வெற்றி பெற்று மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். துணை மேயராக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியின்றி தேர்வானார்.
சென்னை,
காஞ்சீபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளது. இதில் 36-வது வார்டு உறுப்பினர் ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டதால் அந்த வார்டுக்கான தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 50 வார்டுகளுக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணி 32 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 9 இடங்களிலும், பா.ம.க- 2 இடங்களிலும், பா.ஜ.க.- 1 இடத்திலும், சுயேச்சைகள் 6 இடத்திலும் வெற்றி பெற்றனர்.
இதில் 9-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.மகாலட்சுமி யுவராஜை காஞ்சீபுரத்தின் மேயர் வேட்பாளராக தி.மு.க. தலைமை அறிவித்தது. இதனால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று காலை நடைபெற்றது. 50 வார்டு கவுன்சிலர்களும் மாநகராட்சி கூட்டரங்கிற்கு வந்தனர். மேயர் வேட்பாளராக மகாலட்சுமி நகராட்சி கமிஷனரிடம் மனுதாக்கல் செய்தார். சிறிது நேரத்தில் அவரை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த 8-வது வார்டு கவுன்சிலர் மனுதாக்கல் செய்தார். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மேயர் வேட்பாளரை போட்டியின்றி தேர்வு செய்ய முடியாத நிலை உருவானது.
தி.மு.க. வேட்பாளர் வெற்றி
இதையடுத்து மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதை அறிந்த தி.மு.க. நிர்வாகிகள் பலர் அங்கு கூடினர். இதில் 29 வாக்குகள் பெற்று தி.மு.க. தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர் மகாலட்சுமி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற தி.மு.க. போட்டி வேட்பாளர் சூர்யா சோபன்குமார் 20 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஒரு வாக்கு செல்லாத வாக்காக கருதப்பட்டது.
காஞ்சீபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக வெற்றி பெற்ற மகாலட்சுமிக்கு மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான நாராயணன் செங்கோல் அளித்து பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
துணை மேயர்
பின்னர் மதியம் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. காஞ்சீபுரம் மாநகராட்சி துைண மேயர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்வதாக தி.மு.க. தலைமை அறிவித்து இருந்தது. அதன்படி காங்கிரஸ் சார்பில் 22-வது வார்டில் வெற்றி பெற்ற குமரகுருநாதன் துணை மேயர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து போட்டியிட வேறு யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் குமரகுருநாதன், காஞ்சீபுரம் மாநகராட்சி துணை மேயராக போட்டியின்றி தேர்வானார்.

Related Tags :
Next Story