அனகாபுத்தூரில் கல்குவாரி குட்டையில் மூழ்கி ‌2 மாணவர்கள் சாவு


அனகாபுத்தூரில் கல்குவாரி குட்டையில் மூழ்கி ‌2 மாணவர்கள் சாவு
x
தினத்தந்தி 5 March 2022 7:07 AM IST (Updated: 5 March 2022 7:07 AM IST)
t-max-icont-min-icon

அனகாபுத்தூரில் கல்குவாரி குட்டையில் மூழ்கி ‌2 மாணவர்கள் பலியானார்கள்.

தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பத்மநாதன் சம்மந்தனார் தெருவை சேர்ந்தவர் முனியேந்திரன். இவருடைய மகன் முனி லோகேஷ்(வயது 17). இவர், பொத்தேரியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதேபோல் பொழிச்சலூர் பிள்ளையார் கோவில் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த மோகன்ராஜ் மகன் யுகேஷ்(17). இவர், அனகாபுத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று மாலை முனி லோகேஷ், தனது நண்பரான யுகேஷ் உள்பட 6 பேருடன் அனகாபுத்தூர் காமராஜபுரத்தில் உள்ள கல்குட்டையில் குளித்து கொண்டிருந்தார். யுகேசுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதைபார்த்த முனி லோகேஷ், நண்பனை காப்பாற்ற கல்குட்டையில் குதித்தார். இதில் முனிலோகேஷ், யுகேஷ் இருவரும் நீரில் மூழ்கி பலியானார்கள். தாம்பரம் தீயணைப்பு துறையினர் 2 பேரையும் பிணமாக மீட்டனர். இதுபற்றி சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகி்ன்றனர்.

Next Story