துவரை ஒரு கிலோ ரூ.63-க்கு கொள்முதல் செய்யப்படும் கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல்
துவரை ஒரு கிலோ ரூ.63-க்கு கொள்முதல் செய்யப்படும் கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் துவரை ஒரு கிலோ ரூ.63-க்கு கொள்முதல் செய்யப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
விலை ஆதார திட்டம்
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைத்திடவும், வருவாயை பெருக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் விலைஆதாரத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் விவசாயிகளிடமிருந்து துவரை நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக 2021-22-ம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில், வேலூர் விற்பனைக்குழு கட்டுப்பாட்டில் உள்ள திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் துவரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடப்பு பருவத்தில் 700 டன்னும், வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 700 டன்னும் துவரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துவரை கிலோ ரூ.63-க்கு கொள்முதல் செய்யப்படும். இத்திட்டம் வருகிற 15-ந் தேதி வரை செயல்படுத்தப்படும். விவசாயிகள் தங்களின் நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் மற்றும் வங்கிக்கணக்குப் புத்தகத்துடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம்.
வரவுவைக்கப்படும்
விளைபொருளுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேளாண் துணை இயக்குனர் வேளாண் வணிகம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, திருப்பத்தூர், செயலாளர் வேலூர் விற்பனைக்குழு, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் திருப்பத்தூர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வாணியம்பாடி ஆகியோரை அணுகலாம்.
இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story