தம்பி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


தம்பி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
x
தினத்தந்தி 5 March 2022 8:18 PM IST (Updated: 5 March 2022 8:18 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே தம்பி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள மேல புளியங்குளத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து மனைவி முத்துசெல்வி (வயது 35). கணவருக்கு சொந்தமான பூர்வீக பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இதனிடையே பேச்சிமுத்துவின் சகோதரர் இசக்கிமுத்து (40) என்பவர், முத்துசெல்வியிடம் பண்ணை வீட்டை காலிசெய்யுமாறு கூறி அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இசக்கிமுத்து, மதுபோதையில் சென்று முத்துசெல்வியிடம் பண்ணை வீட்டை காலி செய்யக்கோரி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்சன் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்தார்.

Next Story