சேதமடைந்த மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்


சேதமடைந்த மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை  சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 5 March 2022 9:00 PM IST (Updated: 5 March 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

விழல்கோட்டகத்தில் சேதமடைந்த மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்:
விழல்கோட்டகத்தில் சேதமடைந்த மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம்
கூத்தாநல்லூர் அருகே விழல்கோட்டகம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அரசு சார்பில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இந்த கட்டிடத்தை அப்பகுதியை சேர்ந்த மகளிர் குழுக்கள் அரசு சார்ந்த திட்ட பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
பூட்டியே கிடக்கிறது
இந்தநிலையில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் கட்டிடத்தின் உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து, சில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. விரிசல்கள் ஏற்பட்ட இடங்களில் மழை தண்ணீர் கட்டிடத்தின் உள்ளே சென்று சேதமடைந்து வருவதாகவும், இதனால் கட்டிடத்தின் உள்பகுதியில் கூட தரைதளம் ேசதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கட்டிடம் சேதமடைந்து உள்ளதால் பூட்டியே கிடக்கிறது. 
சீரமைக்க வேண்டும் 
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---


Next Story