‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 5 March 2022 9:06 PM IST (Updated: 5 March 2022 9:06 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தார்சாலை அமைக்கப்படுமா?
வேடசந்தூர் தாலுகா தேவநாயக்கன்பட்டி அருகே உள்ள ராயப்பிள்ளைகுளத்தில் இருந்து ஆழிக்குளம் செல்லும் சாலை மண்பாதையாக உள்ளது. இதனால் அந்த பாதை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே ராயப்பிள்ளைகுளம், ஆழிக்குளம் இடையே தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சந்தனத்துரை, தேவநாயக்கன்பட்டி.
சாலையில் வீணாக தேங்கும் குடிநீர்
தேனி புதிய பஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் கடந்த வாரமாக உடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் அடைப்பு சரிசெய்யப்படவில்லை. இதனால் ஒரு வாரமாக குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாக சாலையில் தேங்குகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வா, தேனி.
மயானத்துக்கு பாதை வேண்டும்
செந்துறையை அடுத்த பெரியூர்பட்டியில் உள்ள மயானத்துக்கு செல்ல பாதை வசதி செய்யப்படவில்லை. இதனால் இறந்தவர்களின் உடலை சுமந்துகொண்டு அப்பகுதியில் உள்ள ஆற்றில் இறங்கி நடந்தே மயானத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மயானத்துக்கு செல்ல முடியாது. எனவே மயானத்துக்கு செல்ல பாதை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும்.
-வேலுச்சாமி, பெரியூர்பட்டி.
குண்டும், குழியுமான சாலை
திண்டுக்கல்லில், தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பண்ணை குறிஞ்சிநகரில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணி, பண்ணை குறிஞ்சி நகர்.

Next Story