கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு
நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் தேர்தல் முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட பெண் கூறினார்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் தேர்தல் முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட பெண் கூறினார்.
ஒரு ஓட்டில் வெற்றி
நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் ராம்ராஜ், அ.தி.மு.க. சார்பில் பரிமளா செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் ராம்ராஜ் 8 வாக்குகள் பெற்றார். ஒரு வாக்கு வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி ராஜசேகர் அறிவித்தார். பரிமளா செந்தமிழ்ச்செல்வன் 7 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.
சாலைமறியல்
அப்போது தி.மு.க. தரப்பு வாக்குச்சீட்டில் தவறுதலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. எனவே அந்த வாக்குகளை செல்லாத வாக்குகளாக அறிவிக்க வேண்டும். ராம்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை வாபஸ் பெற வேண்டும் என பரிமளா செந்தமிழ்ச்செல்வன் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார்.
இதனை தேர்தல் அதிகாரி ஏற்கவில்லை. இதனையடுத்து தேர்தல் முடிவை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர்.
கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு
இந்த நிலையில் பரிமளாசெந்தமிழ்ச்செல்வன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராம்ராஜூக்கு 8 உறுப்பினர்களும் தேர்தல் விதிமுறைப்படி வாக்களிக்கவில்லை. ஒவ்வொரு உறுப்பினரும் ராம்ராஜ் பெயரின் ஒவ்வொரு எழுத்திலும் டிக் அடித்துள்ளார்கள். தேர்தல் விதிப்படி வாக்களிக்கவில்லை. ஆனால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் தேர்தல் விதிப்படி வாக்களித்துள்ளோம்.
இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட அவமானம். எனவே இந்த தேர்தல் முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்றார்.
----
Related Tags :
Next Story