சுயஉதவிக்குழு பெண்களுக்கு ரங்கோலி-ஓவிய போட்டிகள்


சுயஉதவிக்குழு பெண்களுக்கு ரங்கோலி-ஓவிய போட்டிகள்
x
தினத்தந்தி 5 March 2022 10:00 PM IST (Updated: 5 March 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சுயஉதவிக்குழு பெண்களுக்கு ரங்கோலி, ஓவிய போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல்:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மாநிலம் முழுவதும் சுயஉதவிக்குழு பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார அளவில் நடைபெற்ற போட்டியில், முதல் 3 இடங்களை பிடித்த குழுக்களுக்கு மாவட்ட அளவிலான போட்டி ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில், மாவட்டம் முழுவதும் 45 குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். மரம் நடுதல், சுற்றுப்புற சுகாதாரம், பாலின பாகுபாடு களைதல் உள்ளிட்ட தலைப்புகளில் நவதானியங்களில் ரங்கோலி, ஓவியம், பேச்சு, பாடல், நாடகம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. பேராசிரியர் வேங்கடராவ், மாநில வள பயிற்றுனர் நிலாபாரதி, உதவி திட்ட அலுவலர் வினோதா உள்ளிட்ட அலுவலர்கள் சிறந்த குழுக்களை தேர்வு செய்தனர். இதையடுத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் சரவணன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார். இதில் ரங்கோலி போட்டியில் குஜிலியம்பாறை குழுவும், ஓவியத்தில் வடமதுரை குழுவும், பேச்சுபோட்டியில் சாணார்பட்டி குழுவும், பாடல் போட்டியில் நத்தம் குழுவும், நாடக போட்டியில் பழனி குழுவும் முதல் பரிசை பெற்றன. இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.என்.எல். என்ஜினீயர் சுசிலாமேரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story