தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி சித்திரை இளங்கோவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தராஜன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்க தலைவர் தாஸ், நிர்வாகிகள் ரவிச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். புதிய கணக்குகள் தொடங்குமாறு தபால் ஊழியர்களை நிர்பந்தம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்களுக்கு எதிரான மத்திய அரசின் ஆணையை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் கண்ணன், ராஜேந்திரன், கார்த்திகேயன், அபிநயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story