திருக்கடையூரில் கொரோனா தடுப்பூசி முகாம்
திருக்கடையூரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
திருக்கடையூர்:-
திருக்கடையூரில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார். தடுப்பூசி முகாமை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் சந்திரகுமார் தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர்கள் வெங்கடேசன், ராதாகிருஷ்ணன், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், டாக்டர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story