வாங்கி வைத்திருந்த ரூ1லட்சம் திருட்டு பூனை பிடிக்க வந்தவர்கள் ைகவரிசையா


வாங்கி வைத்திருந்த ரூ1லட்சம் திருட்டு பூனை பிடிக்க வந்தவர்கள் ைகவரிசையா
x
தினத்தந்தி 5 March 2022 10:45 PM IST (Updated: 5 March 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே மகனின் திருமணத்திற்காக பெண் கடன் வாங்கி வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பட்டப்பகலில் வீடு புகுந்த மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே மகனின் திருமணத்திற்காக பெண் கடன் வாங்கி வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பட்டப்பகலில் வீடு புகுந்த மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

ஓட்டல் தொழிலாளி

நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளி கிராமம், மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவரது கணவர் சென்றாயன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பின் சாந்தி கூலி வேலை செய்து தனது மகனை ஓட்டல் மேனேஜ்மென்ட் படிக்க வைத்துள்ளார். தற்போது அவரது மகன் வேலூரில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க மகளிர் சுய உதவிக்குழு மூலம் சாந்தி ரூ.1 லட்சம் கடன் வாங்கி அதனை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்துள்ளார்.

நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு சாந்தி வேலைக்கு சென்றார். மதியம் வீட்டிற்கு திரும்பியபோது வீடு திறக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டு கதறினார்.

பூனை பிடிப்பவர்கள்

அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அங்கு வந்து விசாரித்தனர். சாந்தி வீட்டின் அருகே பாழடைந்த வீடு ஒன்றில் அடையாளம் தெரியாத 2 பெண்கள் உள்பட 10 பேர் பூனை பிடிப்பதற்காக சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. 

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு வந்து சாந்தி வீட்டில் கதவு மற்றும் பீரோவில் பதிவான கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

அதன் மூலம் மர்மநபர்கள் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி மர்மநபர்களை கண்டறிந்து பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மகன் திருமணத்திற்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்று வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் பட்டப்பகலில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story