தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் ஏலக்காய் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள 550 கிலோ ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள 550 கிலோ ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டது.
ரோந்து பணி
தூத்துக்குடியில் இருந்து இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க கியூ பிராஞ் போலீசார் மாவட்டம் முழுவதும் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், ஜீவமணி, சுரேஷ், இருதயராஜ், மரைன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி மற்றும் போலீசார் தாளமுத்துநகர் விவேகானந்தன் காலனி கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
550 கிலோ ஏலக்காய்
அப்போது கடற்கரை அருகே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த 2 படகுகளில் சோதனையிட்டபோது மொத்தம் 14 மூட்டைகளில் 550 கிலோ ஏலக்காய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் ஏலக்காய் மற்றும் 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஏலக்காய் மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த ஏலக்காய் மூட்டைளை மர்ம நபர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story