வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்


வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்
x
தினத்தந்தி 5 March 2022 11:16 PM IST (Updated: 5 March 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் வீட்டை அகற்ற முயன்றதால் அதனை எதிர்த்து பொதுமக்களுடன் வீட்டு உரிமையாளர் மறியலில் ஈடுபட்டார்.

வேலூர்

வேலூரில் வீட்டை அகற்ற முயன்றதால் அதனை எதிர்த்து பொதுமக்களுடன் வீட்டு உரிமையாளர் மறியலில் ஈடுபட்டார்.

வேலூர் முள்ளிபாளையம் கே.கே.நகரை சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் அருகே நிலத்தை ஆக்கிரமித்து குடிசை வீடு கட்டி உள்ளதாக வேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் குடிசை வீட்டை இடித்து அகற்ற உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவை நிறைவேற்ற வேலூர் கோர்ட்டு அமீனா மற்றும் ஊழியர்கள் நேற்று நடவடிக்கை எடுத்தனர். அதன்படி வீட்டை இடிக்க பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.

இதை கண்டித்து அந்த குடிசை வீட்டினரும் அவருக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்தவர்களும் அங்கு திரண்டனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்கள் போலீசாரிடமும், கோர்ட்டு ஊழியர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே ஆத்திரமடைந்த அவர்கள் அருகில் இருந்த பெங்களூரு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைத்தனர். அதைத்தொடர்ந்து வீட்டை இடித்து அகற்றினர்.


Next Story