திருவண்ணாமலை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு


திருவண்ணாமலை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 5 March 2022 11:51 PM IST (Updated: 5 March 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை ஒன்றியத்தில் ரூ.35¾ லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஒன்றியத்தில் ரூ.35¾ லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.

 உதவி இயக்குனர் ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை திருவண்ணாமலை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) டி.கே.லட்சுமிநரசிம்மன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தலையாம்பள்ளம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் பக்க கால்வாய் பணியினையும், அதே ஊராட்சியில் பள்ளத்தெருவில் ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள பக்க கால்வாய் அமைக்கும் பணியினையும் பார்வையிட்டார். 

மேலும் ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மையம் கட்டிட பணிகளை பார்வையிட்டு, விரைந்து முடித்திட அறிவுறுத்தினார். 

 கால்வாய் பணி

தொடர்ந்து பழையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ப.வலசை பகுதியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 50 மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பக்க கால்வாய் பணியினை பார்வையிட்டார். 

வேளையாம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்ந்த நடைமுறைகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டு ஊராட்சியின் பதிவேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை தணிக்கை செய்து ஊராட்சி மன்ற தலைவர், செயலர், அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

ஆய்வின் போது திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தராஜ், லட்சுமி, உதவி பொறியாளர் வினோத்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் ஊராட்சி செயலர்கள் உடனிருந்தனர்.

Next Story