ரூ.1.80 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு


ரூ.1.80 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 5 March 2022 11:53 PM IST (Updated: 5 March 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

ரூ.1.80 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஸ்ரீரங்கம், மார்ச்.6-
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான 70 சென்ட் நிலம் திருவானைக்காவல் டிரங்க் ரோடு பகுதியில் உள்ளது. இதில் 6 சென்ட் இடத்தை தனியார் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்து உள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் அங்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 80 லட்சம் என கூறப்படுகிறது.

Next Story