ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி முகாம்


ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 5 March 2022 11:57 PM IST (Updated: 5 March 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்காயம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

வாணியம்பாடி
ஆலங்காயம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஆர்.ஜி.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ், ஊராட்சிகளோடு சமுதாய அமைப்புகள் இணைந்து பணியாற்றுதல் குறித்த பயிற்சி நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிராமங்களின் முக்கியத்துவம், ஊராட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம், பெண்களுக்கான இட ஒதுக்கீடு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், மூன்றடுக்கு ஊராட்சி செயல்படும் விதம், மாவட்ட திட்டக்குழு, ஒப்பளிப்பு பணிகள், வறுமை ஒழிப்பு திட்டங்கள், கிராம சபையின் முக்கியத்துவம் போன்ற பல்வேறு அடிப்படையான தகவல்களையும், இவற்றை மக்கள் நலப் பணிகளுக்காக எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், எஸ்.ஐ.ஆர்.டி. மாநில பயிற்றுனர்கள் சங்கர் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சமுதாய அமைப்பினருக்கு பயிற்சி அளித்தனர்.
நிறைவு நாளில் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் (திட்டம்) பயிற்சி வகுப்பை நேரில் பார்வையிட்டார். 


Next Story