அடுத்தடுத்த 2 வீடுகளில் துணிகர திருட்டு


அடுத்தடுத்த 2 வீடுகளில் துணிகர திருட்டு
x
தினத்தந்தி 5 March 2022 11:59 PM IST (Updated: 5 March 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை பகுதியில் அடுத்தடுத்த 2 வீடுகளில் துணிகர திருட்டு நடைபெற்று உள்ளது.

காரைக்குடி,

தேவகோட்டை பகுதியில் அடுத்தடுத்த 2 வீடுகளில் துணிகர திருட்டு நடைபெற்று உள்ளது. 

திருட்டு

தேவகோட்டை அண்ணா சாலை வடக்கு வீதியை சேர்ந்தவர் அருள்தாஸ். இவர் தனது மனைவி, மகன் பிரதீப், மகள், தந்தை சந்தியாகுவுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். சந்தியாகு ஓய்வு பெற்ற ராணுவ வீரர். பிரதீப் வேலூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிைலயில் வேலூரில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக அருள்தாஸ் தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். இந்த நிலையில் அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அக்கம், பக்கத்து வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அறிந்த அருள்தாஸ் உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம், வெள்ளி கொலுசுகள் திருடப்பட்டு இருந்தன. அதோடு அவரது வீட்டில் இருந்த டி.வி.யும் திருடப்பட்டு இருந்தது. 

போலீசார் விசாரணை

இதே போல இவரது பக்கத்து வீட்டிலும் திருட்டு நடைபெற்றது. பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் சம்பத்தன்று பெங்களூருவில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது யாேரா மர்ம ஆசாமிகள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடி சென்று இருக்கிறார்கள். எவ்வளவு பொருட்கள் திருடு போனது என்பது அவர் வந்த பின்னர் தான் தெரிய வரும். இந்த 2 சம்பவங்கள் பற்றி அறிந்ததும் தேவகோட்டை துணை சூப்பிரண்டு ரமேஷ், நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் 2 வீடுகளிலும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர் குழுவினர் வந்து தடயங்கள் எதுவும் சிக்கி இருக்கிறதா? என ஆய்வு செய்தனர்.
ெதாடர் திருட்டால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும். தொடர் திருட்டில் ஈடுபட்டு உள்ள ஆசாமிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story