திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலம் தாழக்குடியில் மீட்பு


திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலம் தாழக்குடியில் மீட்பு
x
தினத்தந்தி 6 March 2022 12:00 AM IST (Updated: 6 March 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் தாழக்குடியில் மீட்கப்பட்டது.

சுசீந்திரம், 
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் தாழக்குடியில் மீட்கப்பட்டது.
திருச்செந்தூர் கோவில் நிலம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமிக்கு சொந்தமாக பல ஆயிரக்கணக்கான நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களும், கட்டிடங்களும் உள்ளன. இதனை தனிநபர்கள் வாடகைக்கும், குத்தகைக்கும் எடுத்து அனுபவித்து வருகின்றனர். 
கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சொந்தமான நிலம், கட்டிடங்கள் உள்ளன. இந்த நிலங்களை சிலர் ஆக்கிரமித்ததாக புகார்கள் வந்தன. 
மீட்பு
அதன்டி திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சொந்தமான இடம் தாழக்குடி கிராமத்தில் உள்ளது. அங்கு 2 ஏக்கர் 3 சென்ட் நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து அனுபவித்து வந்தது தெரிய வந்தது. 
இதை தொடர்ந்து திருச்செந்தூர் திருக்கோவில்களின் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் உதவி ஆணையர் வெங்கடேஷ், கட்டளை கண்காணிப்பாளர் அய்யர் சிவமணி, கோவில் பணியாளர்கள் ஜெயந்திநாதன், கணேசன் ஆகியோர் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டு அவ்விடத்தில் திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்தனர்.
ரூ.1 கோடி மதிப்பு
இதுகுறித்து இணை ஆணையர் குமரதுரை கூறுகையில், சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட இந்த நிலத்தை ஆணையர் அனுமதி பெற்று பொது ஏலம் மூலம் அனுபவத்திற்கு விட திருக்கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும் எவரேனும் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து இருந்தால் கோவிலில் வந்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும். திருக்கோவிலுக்கு கட்ட வேண்டிய குத்தகை மற்றும் வாடகை தாரர்கள் பாக்கியை செலுத்தி  நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Next Story