வெவ்வேறு விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி


வெவ்வேறு விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 6 March 2022 12:09 AM IST (Updated: 6 March 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கீரமங்கலம்:
முதியவர் பலி
கீரமங்கலம் அருேக பனங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 70). இவர், கீரமங்கலத்தில் ஒரு டீக்கடையில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று காலை தனது சைக்கிளில் கீரமங்கலத்திற்கு சென்று கொண்டிருந்த போது, கீரமங்கலம் மேற்கு பகுதியில் எருக்கலக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சதீஷ் மகன் முருகேஷ் (வயது 21) என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேன் சைக்கிளில் மோதியதில் வீரமுத்து படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் சாவு 
விராலிமலை தாலுகா மேலபச்சக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் ரகுநாதன் (வயது 20). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக விராலிமலை வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பூதகுடி சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரி திடீரென இடதுபுறம் திரும்பியதால் ரகுநாதன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக லாரியின் பின்னால் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரகுநாதனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரகுநாதன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story